Type Here to Get Search Results !

உழைப்பு = வெற்றி தமிழ் சிந்தனை வரிகள்





உழைப்பு = வெற்றி தமிழ் சிந்தனை வரிகள்


Hard work = Success Tamil Inspirational Quotes


Hard work Tamil Quotes 1

Hard work Tamil Quotes 2

Hard work Tamil Quotes 3

Hard work Tamil Quotes 4

Hard work Tamil Quotes 5

Hard work Tamil Quotes 6

Hard work Tamil Quotes 7

Hard work Tamil Quotes 8

Hard work Tamil Quotes 9

Hard work Tamil Quotes 10

Hard work Tamil Quotes 11

Hard work Tamil Quotes 12

Hard work Tamil Quotes 13

Hard work Tamil Quotes 14




உழைப்பு = வெற்றி தமிழ் சிந்தனை வரிகள்


Hard work = Success Tamil Inspirational Quotes


1.துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

2.கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

3.எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

4.எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.


5.மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!

6.வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் :
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.


7.சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும்


8.சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான்

9. உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும். உழைப்பின்றி ஜீவிப்பதில் உற்சாகமில்லை.

10.வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை - இம்மூன்றும் இருந்தால் போதும்

11.பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

12.உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர் உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.

13.உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content