சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #01
SatyaSai inspirational quotes in Tamil Part 01
SatyaSai inspirational quotes in Tamil Part 01
1.ஒழுக்கமே உயர்வுக்கான ஒரே வழி. உலகெங்கும் ஒழுக்கம் நிலைத்து விட்டால் எல்லாம் நன்மையாக நடக்கும்.
2.ஆயிரம் நூல்களைப் படிப்பதை விட ஒரு நல்ல நூலின் கருத்தை வாழ்வில் பின்பற்றுவது மேலானது.
3.ஒழுக்கமற்ற அறிவாளியை விட, ஒழுக்கமுள்ள கல்வியறிவு இல்லாத பாமரனே உயர்ந்தவன்.
4.பிறரை மகிழ்ச்சிப்படுத்த பணம் தேவையில்லை. ஒன்றிரண்டு இனிய சொற்களே போதுமானது.
5.இந்த உலகத்தில் எல்லாம் அறிந்தவரும் யாருமில்லை. ஏதும் அறியாதவர் என்றும் யாருமில்லை.
6.நன்றி மறந்த கயவரையும் மன்னிப்பவரே சான்றோர்கள்.
7.கோபமே மனிதனுக்கு கொடிய எதிரி. அன்பே அவனது உற்ற தோழன்.
8.பிறரிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் பார்க்கப் பழகுவது உங்களுக்கும் அவருக்கும் நன்மை தரும்.
9.மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு சேர்க்கிறது. மனிதனுக்கும் பணிவே பெருமை சேர்க்கிறது.
10.பணம் மனிதனை ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது. நற்பண்பே மனிதனை ஆட்சி செய்ய வேண்டும்.
சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #01
SatyaSai inspirational quotes in Tamil Part 01