சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #02
SatyaSai inspirational quotes in Tamil Part 02
11.அயல்நாட்டு மோகம் என்னும் வலையில் நம் பாரம்பரியமும், பண்பாடும் சிக்கிக் கிடக்கிறது.
12.பட்டம், பதவிக்காக மனிதன் அலைந்து திரியக் கூடாது. அது தானாகவே தேடி வர வேண்டும்.
13.நற்பண்பு இல்லாத மனிதன் உப்பில்லாத பண்டத்திற்குச் சமம்.
14.உன்னைப் பற்றி உயர்வாக எண்ணுவது போல, பிறரைப் பற்றியும் உயர்வாகவே கருது.
15.தன்னைப் பற்றி எப்போதும் தாழ்வாக கருதுபவன் வாழ்வில் தாழ்ந்த நிலையை அடைய நேரிடும்.
16.காய்ச்சலில் கிடப்பவனுக்கு கற்கண்டு கூட கசக்கும். அது போல தீயவர்களுக்கு கடவுளின் நாமம் கூட கசக்கவே செய்யும்.
17.பிறந்த மண்ணை நேசியுங்கள். நாட்டிற்காகத் தியாகம் செய்யவும் தயாராக இருங்கள்.
18.வாழ்வில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் உருவாகிவிட்டால் அது சமுதாயம் முழுவதும் பிரதிபலிக்கும்.
19.உணவிலும், உடையிலும் எளிமையைக் கடைபிடியுங்கள். பேச்சிலும் இனிமையும், மென்மையும் கலந்திருக்கட்டும்
சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #02
SatyaSai inspirational quotes in Tamil Part 02