சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #11
Sivananda inspirational quotes in Tamil(PART 11)
Sivananda inspirational quotes in Tamil(PART 11)
101.கணக்கற்ற தத்துவ ஞானத்தைவிட, சிறிய பயிற்சி எவ்வளவோ சிறந்தது.
102.ஒவ்வொரு மாதமும் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவிகிதத்தை தானம் செய்வதுடன், நம்மிடம் உள்ளதை பிறருடன் பகிர்ந்து கொண்டால் உலகமே ஒரே குடும்பமாக மாறும்.
103.பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சத்தியத்தைக் கடைபிடிப்பவன் சித்தி பெற்று விடுவான். அவனுடைய வார்த்தைகள் அனைத்தும் தெய்வீக சக்தி பெற்றுவிடும்.
104.கண்களால் நல்லதை மட்டும் பாருங்கள். காதுகளால் நல்ல விஷயங்களை மட்டும் கேளுங்கள்.
105.எல்லாத் தீய பண்புகளும் கோபத்திலிருந்தே புறப்படுகின்றன. கோபத்தைக் கட்டுப்படுத்தியவர்களிடம் தீய குணங்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துபோகும்
106.சத்தியம் எங்கிருக்கிறதோ அந்த இடத்தில் எல்லா நற்குணங்களும் தானாகவே வந்து சேரும். சத்தியம் பேசுபவன் மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும்.
107.தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து தியானம் செய்து மனதை ஒருமுகப்படுத்துங்கள். தியானம் செய்ய தனியிடம் தேவை. அந்த இடம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது நல்லது
108.சைவ உணவை சாப்பிடுங்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். மிதமான உணவு ஆரோக்கிய வாழ்வுக்கு மிகவும் ஏற்றது.
109.உங்களது தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். எளிமையில் ஈடுபாடு கொள்ளுங்கள். மனதிருப்தியே இன்ப வாழ்வு என்பதை உணருங்கள்.
110.எந்த நிலையிலும் உண்மையை மட்டும் பேசுங்கள். கொஞ்சமாகப் பேசுங்கள். இனிமையான மற்றவர் மனம் கவரும் விதத்தில் பேசுங்கள்.
111.செய்த தவறுகளைக் குறித்து எண்ணிப் பார்த்து உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள். இதைத்தான் சுயசோதனை என்பர். அடுத்தவர்களின் குறையைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
112.நேர்மையாக இருங்கள். உழைத்து சம்பாதியுங்கள். நியாயமான வழியில் அல்லாமல் பணத்தையோ, பொருளையோ யாரிடமும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
113.கோபம் கொள்ளாமல் சாந்தமாகப் பேசுங்கள். செயலில் நேர்மையைக் காட்டுங்கள். தவறு செய்பவர்களை மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #11
Sivananda inspirational quotes in Tamil(PART 11)