சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #03
SatyaSai inspirational quotes in Tamil Part 03
SatyaSai inspirational quotes in Tamil Part 03
21.தாயே குழந்தைக்கு தந்தையை அடையாளம் காட்டுகிறாள். அதுபோல வேதம் என்னும் தாய், நமக்கு தந்தையாகிய கடவுளைக் காட்டுகிறாள்.
22.கடமையைச் சரிவரச் செய்து வந்தால், அதற்குரிய பலனும் தானாகவே நம்மை வந்தடையும்.
23.தன்னலம் கருதாமல் செய்யும் பொதுத்தொண்டு, கலப்படம் இல்லாத தங்கத்திற்குச் சமமானது.
24.தொண்டு என்றதும் ஏதோ பெரிய செயல் என்று கருத வேண்டாம். பிறர் துன்பம் கண்டு ஆறுதல் கூறுவதும் சிறந்த தொண்டே
25.அன்பே சிறந்த முதலீடு. எவ்வளவு முதல் போடுகிறோமோ அதற்கேற்ப லாபமும் அதில் அதிகமாக கிடைக்கும்.
26.பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் செய்ய முன் வர வேண்டும்.
27.அறிவும் மானமும் ஒருவருக்கொருவர் பங்காளிகள். ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே தான் இருக்கும்.
28.தர்மம் செய்வதால் நல்வாழ்வு அமைவதோடு வாழ்வின் இறுதிக்காலம் நிம்மதியாக அமையும்.
29.சுயஅறிவு இல்லாதவனுக்கு சொல்லப்படும் அறிவுரை ஓட்டைக் குடத்தில் நீர் நிரப்பியது போலாகும்.
30.ஆயிரம் அறிவுரைகளை சொல்வதை விட, ஒரு செயலைச் செய்வது மேலாகும்.
சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #03
SatyaSai inspirational quotes in Tamil Part 03