சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #04
SatyaSai inspirational quotes in Tamil Part 04
SatyaSai inspirational quotes in Tamil Part 04
31.தான் பெற்ற அறிவு, ஆற்றல், செல்வம் அனைத்தையும் சமுதாயத்திற்குச் செலவழிப்பவன் போற்றத்தக்கவன்.
32..முதலில் குடும்பத்திற்கு சேவை செய்யுங்கள். அதன்பின் பொதுசேவையில் ஈடுபடுங்கள்.
33.மனதில் எழும் ஆசை நியாயமானதா என்று யோசித்து செயல்படுங்கள்.
34.பொருள் இல்லாதவனை ஏழை என்று உலகம் எண்ணுகிறது. உண்மையில் ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.
35.துன்பத்திற்குக் காரணமான தீய ஆசை ஒழிந்தால், வாழ்வு பலாச்சுளையாக இனிக்கும்.
36.ஆடு, மாடுகள் கடித்துவிடாதபடி செடிக்கு வேலியிடுவது போல, மனதிற்கு வைராக்கியம் என்னும் வேலி இட்டால் தீங்கு உண்டாகாது.
37.ஆசை என்னும் கை விலங்கை அறுத்து எறிந்தால், மனிதன் சுதந்திரப் பறவை போல வாழலாம்.
38.உயர் பதவியில் இருப்போர் கடைநிலை ஊழியர் போல பணிவுடன் இருந்தால் புகழ்நிலையில் முன்னணி வகிக்கலாம்.
39.பொறாமை, சினம், தற்பெருமை போன்ற தீய குணங்களால் மனிதன் அமைதியின்றி தவிக்கிறான்.
40.நாலு பேருக்கு நல்லது செய்ய விரும்பினால் எதிர்ப்பைச் சந்திக்காமல் இருக்க முடியாது.
சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #04
SatyaSai inspirational quotes in Tamil Part 04