சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #05
SatyaSai inspirational quotes in Tamil Part 05
SatyaSai inspirational quotes in Tamil Part 05
41.தியாகம் உண்டானால் தன்னலம் என்னும் வியாதி மறைந்து விடும்.
42.பொருளை இழப்பது மட்டும் தியாகம் அல்ல. ஆசைகளை அழிப்பதே தியாகம்.
43.துன்பத்தைக் கண்டு சோர்வடைய வேண்டாம். நெருப்பில் இட்ட தங்கமே அணிகலனாக ஒளி வீசும்.
44.யாரிடமும் பகை உணர்வு வேண்டாம். ஏனெனில் அனைவரின் உள்ளத்திலும் ஒரே கடவுளே குடிகொண்டிருக்கிறார்.
45.வாழ்வில் குறுக்கிடும் சிரமத்தை கண்டு கலங்குவதால் பயனில்லை. அது தரும் பாடங்களை மறப்பது கூடாது.
46.ஆசை என்னும் உமி உயிரை மூடியிருக்கிறது. உமியை நீக்கி விட்டால் அரிசி மீண்டும் முளைப்பதில்லை.
47.உலகில் தோன்றிய எந்தப் பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது.
48.ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும் போது வீண் புலம்பல், கவலை அனைத்தும் பறந்தோடி விடும்.
49.போலி ஒருநாளும் உண்மையாகாது. வேடம் கலைந்தால் உண்மை உலகிற்கு தெரியவரும்.
50.கடவுளிடம் அன்பு செலுத்துவது உண்மை என்றால், நீங்கள் எல்லா உயிர்களையும் ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று பொருள்.
சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #05
SatyaSai inspirational quotes in Tamil Part 05