சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #06
SatyaSai inspirational quotes in Tamil Part 06
SatyaSai inspirational quotes in Tamil Part 06
51.கன்று வளரும் போதே அதன் கொம்பும் வளர்வது போல செல்வம் வளரும் போதே செருக்கும் வளர்ந்து விடுகிறது.
52.காரணம் இன்றி கடவுள் எதையும் படைக்கவில்லை. உலகிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது.
53.எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக இருப்பது சிறப்பு. ராமன் என்று பெயர் இருப்பதை விட ராமனாக வாழ்வது சிறந்தது.
54.உண்பதற்காக உயிர் வாழாதீர்கள். உயிர் வாழ மட்டுமே உண்ணுங்கள்.
55.உழைத்து உண்பவனுக்கு மட்டுமே உணவு உடம்பில் ஒட்டும்.
உழைக்காமல் ஒருவேளை கூட உண்ணக் கூடாது.
56.இனிமையற்ற உண்மை, இனிமையான பொய் இரண்டுமே வாழ்வில் விலக்கப்பட வேண்டியவை.
57.உண்மையை விட மதிப்பு மிக்க விஷயம் வேறில்லை. அது ஒன்றே என்றும் நிலைத்திருக்கும்.
58.உலகம் ஒரு பல்கலைக்கழகம். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியர்களே.
59.இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். ஆனால், ஒழுக்கத்தை இழந்தால் அது உயிரை இழப்பதற்குச் சமமாகி விடும்.
60.சந்தனக் கட்டை தன்னையே அழித்துக் கொண்டு பிறருக்கு மணம் தருகிறது. அதுபோல மனிதன் பிறர்நலனுக்காக வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும்.
சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #06
SatyaSai inspirational quotes in Tamil Part 06