சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #08
Sivananda inspirational quotes in Tamil(PART 08)
Sivananda inspirational quotes in Tamil(PART 08)
71.எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை கொண்டவராக வாழ்வு நடத்துங்கள்.
72.பேச்சில் எப்போதும் இனிமையும், இரக்கமும் கலந்திருக்க வேண்டும்.
73.திறந்த மனதுடன் மற்றவர்களிடம் பழகுங்கள். எண்ணம், செயலில் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
74.தோல்வியைக் கண்டு ஒருபோதும் துவளாதீர்கள். தன்னம்பிக்கையுடன் எப்போதும் முயற்சித்தால் வெற்றி பெறுவது உறுதி.
75.மற்றவருக்கு மகிழ்ச்சியைக் கொடுங்கள். அதைக் கண்டு நீங்களும் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.
76.பிறர் உன்னை இம்சிக்கும் போது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று எண்ணுவது கூடாது.
77.சத்தியம் எங்கு இருக்கிறதோ, அங்கு எல்லா நற்குணங்களும் தானாகவே வந்து சேரும்.
78.நல்லதையே பார்க்கவும், கேட்கவும், சிந்திக்கவும் செய். எல்லா நன்மைகளும் வாழ்வில் பெறுவாய்.
79.கடவுள் ஒரு செயலையும் செய்வதில்லை. ஆனால், அவனின்றி உலகில் ஓர் அணுவும் அசைவதில்லை.
80.ஆசை எப்போது அற்றுப் போகிறதோ அப்போதே கடவுளின் அருளுக்குப் பாத்திரமாகி விட்டதை உணர முடியும்.
சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #08
Sivananda inspirational quotes in Tamil(PART 08)