சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #09
Sivananda inspirational quotes in Tamil(PART 09)
Sivananda inspirational quotes in Tamil(PART 09)
81.நேர்மையை ஒருபோதும் கைவிடாதீர்கள். அதுவே உலகம் முழுவதற்கும் அடிப்படை ஆதாரம்.
82.உள்ளத்தில் பணிவு இருந்தால் மூவுலகையும் ஆளும் வலிமையைப் பெற முடியும்.
83.தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள் உண்மையில் உயர்ந்த மனிதர்களாவர்.
84.முதலில் நல்ல எண்ணத்தை மனதில் வித்திட வேண்டும். அந்த எண்ணம் என்னும் விதையில் இருந்து நற்செயல் என்னும் மரம் முளைக்கத் தொடங்கிவிடும்.
85.உடலுக்கு உணவு முக்கியமாக இருப்பதைப் போல மனிதனுக்கு அன்றாட வழிபாடும், தியானமும் அவசியம்.
86.வெறுமனே கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது ஆன்மிகம் ஆகாது. அது கடவுளோடு இரண்டறக் கலப்பதாகும்.
87.உடல் தூய்மை நீரால் உண்டாவது போல, உள்ளத்தூய்மைக்கு உண்மையும், தியானமும் துணை செய்கின்றன.
88.எப்போதும் கடவுள் சிந்தனையில் ஆழ்ந்திருங்கள். அன்புடன் சமூகசேவை செய்யுங்கள். அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். தெய்வீகவாழ்வுக்கு இவையே தேவை.
89.அகிம்சையைக் கடைபிடித்தால், ஆன்மிக வாழ்வுக்கு தேவையான அனைத்து நற்குணங்களும் உங்களை நாடி வந்துவிடும்.
90.ஆன்மிகத்திற்கு அவசியம் அடக்கம். தன்னடக்கம் கொண்டவன் இருக்கும் இடத்தில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும்.
Sivananda inspirational quotes in Tamil(PART 09)