சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #08
SatyaSai inspirational quotes in Tamil Part 08
SatyaSai inspirational quotes in Tamil Part 08
71.ஆன்மிகத்தில் சாதிக்க விரும்பினால் முதலில் நாக்கை அடக்கப் பழகுங்கள். எப்போதும் அமைதியுடன் பணியாற்றுங்கள்.
72.கடவுள் நமக்கு அளித்த இரண்டு கைகளை கொண்டு உழைத்தால் தன்மானத்துடன் வாழலாம்.
73.ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல நல்லவனும் ஒரு தீய குணத்தால் ஒழுக்கமற்றவனாக ஆகி விடுவான்.
74.பிறருடைய குற்றம் காண்பதிலும் பிறரைக் குறை சொல்வதிலும் நேரத்தை செலவிடாதீர்கள்.
75.கடிவாளமிட்ட குதிரை சரியான பாதையில் செல்வது போல, கட்டுப்பாடு கொண்ட மனம் வாழ்க்கைப் பாதையில் சரியாகச் செல்லும்.
76.காலையில் கண்விழிக்கும் போதும், இரவில் துாங்கச் செல்லும் முன்பும் கடவுளை வழிபட மறவாதீர்கள்.
77.மேடு பள்ளம் நிறைந்தது தான் உலகம். அதுபோல இன்ப துன்பம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.
78.நல்லவர்களை நாடுங்கள். அவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். பக்தி மார்க்கத்தில் முன்னேற இதுவே வழி.
79.மனிதனின் உடன்பிறந்த இயல்பு ஆசை. அதை படிப்படியாக திருத்திக் கொண்டால் மட்டுமே வாழ்வில் உயர முடியும்.
சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #08
SatyaSai inspirational quotes in Tamil Part 08