சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #10
Sivananda inspirational quotes in Tamil(PART 10)
Sivananda inspirational quotes in Tamil(PART 10)
91.கண்களால் நல்லதையே பாருங்கள். காதுகள் நல்ல விஷயத்தை மட்டும் கேட்கட்டும். மனம் எப்போதும் நல்லதையே சிந்திக்கட்டும்.
92.செல்வத்தில் பெருமை கொள்ளாதீர்கள். தேவைகளை குறைத்துக் கொண்டு இருப்பதில் திருப்தி காணுங்கள்
93.தினமும் தெய்வீக நூல்களை சிறிது நேரமாவது படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
94.செய்யும் தவறுகளை சிந்தித்து திருத்திக் கொள்ள முயலுங்கள். பிறர் மீது குற்றம் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள விரும்பாதீர்கள்.
95.உயரிய எண்ணங்களை வளர்த்தால் உயரிய ஒழுக்கம் உருவாகும். தீய சிந்தனையால் தீமையே விளையும்.
96.உங்களது தவறையும், குறையையும் ஒப்புக் கொள்ளுங்கள், அவ்வாறு செய்தாலே நீங்கள் திருந்த வழிபிறக்கும்.
97.மனிதனின் கற்பனைக்கு எட்டாதவராக விளங்குகிறார் கடவுள். ஆனால் அவர் வாழும் உண்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
98.படுமோச நிலையையும் வீரமுடன் எதிர்த்து நில்லுங்கள், சிறந்தவற்றைப் பெறத் தைரியத்துடன் போராடுங்கள்.
99.நல்ல நண்பன் உங்களின் சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்வதோடு, உங்கள் சங்கடத்தில் பங்கும் கொள்கிறான்.
100.தேவைகளைக் குறைப்பதுடன் உடைமைகளையும் குறைக்க வேண்டும். எளிய வாழ்க்கையையும், உயரிய சிந்தனையையும் பெற்றுவிளங்குங்கள்.
சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #10
Sivananda inspirational quotes in Tamil(PART 10)