குருநானக் சிந்தனை வரிகள் – 01 | Guru Nanak inspirational quotes in Tamil 01
1.கண்களை இழந்தவன் குருடன் அல்ல. எவன் தன் குறைகளை மறைக்கிறானோ அவனே குருடன்.
2.பொறுமையைவிட மேலான தவமில்லை. திருப்தியை விட மேலான இன்பமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமில்லை. மன்னித்தலைவிட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.
3.கோபத்தைக் கொன்று விடு. இல்லையேல் அது உன்னைக் கொன்றுவிடும்.
4.மரம் தனக்காக பழுப்பதில்லை! ஆறு தனக்காக ஓடுவதில்லை! சான்றோர் தனக்காக வாழ்வதில்லை!
5.எல்லோரும் இறைவன் பெயரை உச்சரிக்கலாம். ஆனால், மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதால், அவனை அடைய முடியாது.
6.தர்மம் என்னும் நீரில் நீராடி, வாய்மை என்ற வாசனைத் திரவியத்தை பூசிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முகத்தில் பேரொளி வீசும்.
7.ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கிறார்கள். ஆனால், மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதனால் இறைவனை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.
8.அறம் என்னும் நீரில் நீராடி, வாய்மை என்ற வாசனைத் திரவியத்தை பூசிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முகம் பேரொளியால் பிரகாசம் பெற்று விளங்கும்.