கிருபானந்த வாரியார் சிந்தனை வரிகள் - 06 | Kirupanandha Variyar inspirational quotes in Tamil – 06
51.பெற்றோர் உணவைத் தருவது போல, நல்லாசிரியர் நல்லுணர்வைத் தருகிறார்.
52.நம்மிடமுள்ள பொருளை அருளாக மாற்ற விரும்பினால், ஏழைகளுக்கு இயன்றதைக் கொடுத்து உதவுங்கள்.
53.சத்தியத்தைக் காட்டிலும் உயர்ந்த தர்மம் இல்லை. பொய்யைக் காட்டிலும் கொடிய அதர்மம் இல்லை.
54.கடவுளை நினைக்காத நாள் எல்லாம், நமக்கு உயிர் இருந்தாலும் இல்லாதது போலத் தான்.
55.புகழைக் கண்டு மயங்காத நல்லவர்களும் உலகில் இருக்கவே செய்கிறார்கள்.
56.படிப்பால் உண்டாகும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவே உயர்ந்தது.
57.நல்லவர்களின் நட்பைப் பெறாவிட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஒருநாளும் உண்டாகாது.