கிருபானந்த வாரியார் சிந்தனை வரிகள் - 01 | Kirupanandha Variyar inspirational quotes in Tamil - 01
1.உருவத்தால் மட்டுமின்றி உள்ளத்தாலும் மனிதத்தன்மையுடன் நாம் நடக்க வேண்டும். மிருகங்கள் போல செயல்படக்கூடாது.
2.பணம் சேரச் சேர மனிதனுக்கு பசி, தூக்கம், ஒழுக்கம், பக்தி என எல்லாமே குறைந்து விடும்.
3.மனிதனின் மனக்கோணலை நேராக்கி நல்வழிப்படுத்துவதே நல்ல நூல்களின் பயனாகும்.
4.ஒருவர் வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் மனதில் எழும் எண்ணத்தைப் பொறுத்ததே ஆகும்.
5.நிதானமே தலை சிறந்தது. எந்தப் பணியில் ஈடுபட்டாலும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.
6.கண்ணிற்குத் தெரிந்த உலகிற்கு சேவை செய்வதை விட, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்யுங்கள்.
7.சத்தியவழியில் வாழ்வு நடத்துங்கள். பெற்றோர், பெரியோர்களை தெய்வமாக மதியுங்கள்.
8.மனத்தூய்மையுடன் கடவுள் மீது பக்தி செலுத்துங்கள். மலர்ந்த முகத்துடன் இனிமையாகப் பழகுங்கள்.
9.தர்மவழியில் செலவழித்த பணமும், கடவுள் வழிபாட்டில் செலவழித்த நேரமும் நம்முடையது.