காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 01 | Kanji Periyavar inspirational quotes - 01
1.எடுத்துச் சொல்வதை விட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு
2.மனித மனம் எதை தீவிரமாக சிந்தித்தாலும் அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.
3.நல்லவர்களிடம் அன்பு காட்டுவது சிறப்பானது. பாவிகளின் மீது அன்பு செலுத்துவது அதை விட சிறப்பானது.
4.தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதற்கேற்ப வாழ்வில் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
5.அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையன்றி வேறில்லை.
6.எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.
7.பெரியவர்களின் நல்ல அறிவுரைகளை ஏற்பதே சிறந்தது.
8.ஒருவர் நம்மிடம் பழகினாலும், பழகாவிட்டாலும் அவர் மீது மாறாத அன்பு கொள்வதே ஆழமான நட்பாகும்.
9.நிறைவேறாத ஆசைகளே மனதில் காமம், கோபம் ஆகிய தீய எண்ணங்களாக வெளிப்படுகின்றன.
10.நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல துாய்மையாக இருக்கும்.