காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 05 | Kanji Periyavar inspirational quotes in Tamil -05
41.பிறர் துன்பப்படும் போது பணம், உடல் உழைப்பு, வாக்கு ஆகியவற்றால் முடிந்த உதவியைச் செய்வது நம் கடமை.
42.வாழ்க்கை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. நம்மால் இயன்ற நன்மையைப் பிறருக்குச் செய்வதே வாழ்வின் நோக்கம்.
43.பணம், பேச்சு எதுவாக இருந்தாலும் அளவு மீறக் கூடாது. நாளடைவில் செயலிலும் கணக்காக இருக்கும் பழக்கம் ஏற்படும்.
44.ஆசை என்னும் பெயரில் அவசியமில்லாத அல்லது பிறருக்கு தீமை தரும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
45.உன் தேவைகளை நீயே பூர்த்தி செய்ய கற்றுக் கொள். யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதே.
46.எல்லாரிடமும் அன்பு, பேச்சில் இனிமை இவையே தொண்டாற்றுவதற்குரிய அடிப்படை லட்சணம்.
47.சமூக சேவையும், கடவுள் பக்தியும் இணைந்து விட்டால் அகில உலகமும் நன்மை பெறும்.
48.ராமனுக்கு உதவிய அணில் போல தொண்டு சிறிதாக இருந்தாலும் போற்றுவதற்கு உரியதே.
49.நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்.
50.ஆசையின்றி செய்யும் எந்த செயலும் பாவத்தை உண்டாக்காது. ஆசையுடன் செய்யும் எதுவும் புண்ணியத்தை தராது.