கிருபானந்த வாரியார் சிந்தனை வரிகள் - 02 | Kirupanandha Variyar inspirational quotes in Tamil – 02
11.ஒருவரின் அன்பையும், அறிவையும் பேச்சின் மூலம் அறிய முடியாது. அவர்களின் செயலையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
12.பெண்ணாசை கூடாது என ராமாயணமும், மண்ணாசை கூடாது என மகாபாரதமும் கூறுகின்றன.
13.பசு போன்ற சாதுவான மனிதர்களிடம் பழகுவது நன்மையளிக்கும். பாம்பு போன்ற கொடியவர்களிடம் நெருங்கவே கூடாது.
14.ஆடம்பரமோ அலட்சிய எண்ணமோ மனிதனுக்கு கூடாது. எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள்.
15.உறவினர் கூட நம்மைக் கைவிட கூடும். ஆனால் செய்த தர்மம் கூடவே வரும்.
16.மரணவேதனை லட்சம் தேள்கள் கொட்டியது போல கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியும்.
17.துன்பம் இல்லாமல் இன்பமாக வாழ விரும்பினால் மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது.
18.இல்லை என்று தன்னை மறுக்கும் நாத்திகனையும் காப்பாற்றும் பொறுப்பு கடவுளுக்கே இருக்கிறது.
19.குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து பொங்கலிடுவதோடு ஏழைகளுக்கு தர்மமும் செய்ய வேண்டும்.
20.எல்லா உயிர்களும் கடவுள் வாழும் கோவில்கள். அதனால், உயிர்களை நேசித்து வாழ்வது நம் கடமை.