ஓஷோ சிந்தனை வரிகள் – 01 | Osho inspirational quotes in Tamil - 01
1.வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு. ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் பொறுத்தது.
2.அன்பு இல்லாதவன் வாழ்க்கையில் புன்னகை, உற்சாகம் முதலியவை இருக்காது.
3.வன்முறை என்பது மனிதருக்கு வியாதி; ஆனால் விலங்குகளுக்கு அது அவற்றின் இயல்பு.
4.வன்முறை உள்ள மனம் சண்டையிடாமல் திருப்தி அடையாது. பிறரைத் துன்புறுத்துவதிலேயே மகிழ்ச்சி காணும். அத்தகைய மனம் எப்போதும் நிரந்தர மகிழ்ச்சி அடைய முடியாது.
5.செல்வ வளமும், அதன் அனுபவமும் இல்லாமல் அச்செல்வத்தின் பயனற்ற தன்மையை யாரும் உணர முடியாது.
6.ஏழைக்குத் துறவு மனப்பான்மை வருவதில்லை. ஆனால் பணக்காரனுக்கோ தான் இதுவரை சேர்த்ததெல்லாம் வீண் என்பதும், உண்மையில் இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை என்பதும் புரிகிறது.
7.நெருப்பில் கை வைக்க அஞ்சும் மனிதன் கோபமாகிய நெருப்பில் மட்டும் தைரியமாகக் கை வைக்கிறானே!
8.கண்ணாடியில் கூட நாம் நாமாக இருக்க விரும்புவதில்லை. நம் கற்பனை போலவே நாமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே தான் கண்ணாடியின் முன் முழு அலங்காரத்துடன் நிற்கிறோம்.