ஓஷோ சிந்தனை வரிகள் – 02 | Osho inspirational quotes in Tamil - 02
9.நரகத்தைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? இந்த பூமியில் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தைக் காட்டிலும் அந்த நரகம் மோசமானதாகவா இருக்கப் போகிறது?
10.மனிதன் யாரும் சாக விரும்புவதில்லை. தற்கொலை செய்து கொள்பவர்கள் கூட வாழ்வுக்கு எதிரானவர்கள் அல்ல. அடுத்த பிறவியிலாவது நன்றாக இருக்கலாம் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.
11.உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டது மேலோட்டமானதுதான். ஒரு காரோட்டி போலத்தான். காரோட்டிக்குக் காரைப் பற்றி எல்லா விசயங்களும் தெரியுமா?
12.கண்ணில் பட்ட சிறுமணல் எப்படி இந்த அழகிய உலகத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ, அதைப்போல, சிறிய தயக்கம் அல்லது சந்தேகம், இந்த வாழ்வின் பெருமை, அழகு, உங்கள் பலம் அனைத்தையும் மறைத்து விடும்.
13.வெற்றி என்பதில் எந்தத் தகுதியும் கிடையாது. உண்மையாகச் சொன்னால், அது மிகவும் அருவருப்பானது. ஒருவனைத் தோற்கடிப்பது என்பது அர்த்தம் இல்லாதது. ஆனால் அதைத்தான் மனம் விரும்புகிறது. வெற்றி என்பது நம் பழைய மிருக வாழ்க்கையின் மிச்சம்.
14.ஒருவர் உடல் துன்பத்தில் இருக்கும்போது, நீங்கள் எதைப் போதித்தாலும் அது அவர்களுக்கு முட்டாள்த்தனமாகவே படும்.
15.கோடிக்கணக்கில் மக்கள் ஒருவருக்கொருவர் தீர்ப்பு சொல்லிக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
16.சட்டம் என்பது தவறான மனிதனுக்கு உரியது. சரியான மனிதனுக்கு அல்ல. ஏனென்றால், இந்த முழு உலகமும் தவறான மனநிலையில் செயல்படுகிறது. எப்போதாவது ஒரு சரியான மனிதன் வந்தால், அவனை ஒரு அயலான் போலத்தான் பார்க்கிறது.