காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 02 | Kanji Periyavar inspirational quotes - 02
11.பொருளாதார நிலைக்கேற்ப தினமும் தர்மம் செய்யுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது கைப்பிடியளவு அரிசி கொடுங்கள்.
12.காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை பக்தியுடன் வழிபடுங்கள்.
13.அக்கம்பக்கத்தினரோடு நட்புடன் பழகுங்கள். பறவை, விலங்கு என எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.
14.அனைவரும் அன்றாடம் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழகுவது அவசியம்.
15.கணவர் சம்பாதிக்கும் பணத்திற்குள் கட்டு செட்டாக பெண்கள் குடும்பம் நடத்துவது நல்லது.
16.எண்ணம், பேச்சு, செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபட வேண்டும்.
17.பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. நம் சக்தியும் வீணாகாமல் இருக்கும்.
18.அன்பினால் பிறரை திருத்துவது தான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.
19.நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக்குறைவானதே.
20.தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் 'தியாகம் செய்தேன்' என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.