காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 08 | Kanji Periyavar inspirational quotes in Tamil -08
71.கடவுளுக்கு நன்றி சொல்லவே கோவில் வழிபாட்டு முறைகளை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.
72.வெளிவேஷமாக நெற்றியில் திருநீறு பூசுவது கூடாது. திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தம் பெறுகிறது.
73.கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதே நாக்கின் பயன். இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜெபிப்பதால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.
74.வெளியுலகத்தில் மகிழ்ச்சி இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தே உண்டாகிறது.
75.கோபம் என்னும் எதிரிக்கு மனதில் இடம் கொடுக்காவிட்டால், எப்போதும் நிம்மதியாக வாழலாம்.
76.பந்தைச் சுவரில் எறிந்தால் அது நம்மை நோக்கித் திரும்புவது போல கோபமும் நமக்கு எதிராகத் திரும்பி விடும்.
77.ஆசையும், கோபமும் மனிதனை பாவத்தில் தள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன.
78.கோபத்தால் மனதிற்கு மட்டுமில்லாமல் உடலுக்கும் தீமை செய்தவர்களாக ஆகி விடுவோம்.
80.பூமியை விட்டுச் செல்லும் முன் 'என்னிடம் பாவமே இல்லை' என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.