காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 03 | Kanji Periyavar inspirational quotes in Tamil -03
21.ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
22.பெரும்பாலும் மனிதர்கள் ஆசை என்னும் பெயரால் அவசியமற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
23.கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். பக்தி மூலம் மீண்டும் அவரிடம் ஒட்டிக்கொள்வோம்.
24.அலட்சியத்துடன் பணியாற்றுவது கூடாது. யாரையும் இழிவாகக் கருதுவதும் கூடாது.
25.உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள். செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.
26.பக்தி உணர்வு இல்லாமல் மனிதன் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது வறட்டுத்தனமானது.
27.வாழ்வில் எளிமையைக் கடைபிடித்தால் பணத்தேவை குறையும். அப்போது பிறருக்கும் உதவி செய்து வாழ முடியும்.
28.பேச்சில் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பலர், செயலில் சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
29.உடம்பின் அழுக்கு நீராடினால் நீங்கி விடும். உள்ளத்திலுள்ள அழுக்கை தியானப் பயிற்சியால் போக்க முடியும்.
30.கடவுள் நல்ல புத்தி கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி நற்செயல்களில் ஈடுபடுங்கள்.