காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 15 | Kanji Periyavar inspirational quotes in Tamil -15
141.தெருவில் கிடக்கும் முள்ளையும், கண்ணாடியையும் அப்புறப்படுத்துவது கூட சிறந்த சமூகத் தொண்டு தான்.
142.கோபத்தால் மனம், உடல் இரண்டும் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
143.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ள முயன்றால், நம்மிடமுள்ள பாவம் படிப்படியாக அகன்று விடும்.
144.பிறரிடம் உள்ள நல்ல அம்சங்களை பாராட்டுங்கள். அவர்களை உற்சாகமுடன் செயல்படத் தூண்டுங்கள்.
145.தகுதி இருந்தால் மட்டுமே அறிவுரை கூறுங்கள். இல்லாவிட்டால் மவுனத்தைக் கடைபிடியுங்கள்.