காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 04 | Kanji Periyavar inspirational quotes in Tamil -04
31.எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரமாகி விடும்.
32.ஞானம் என்னும் தண்ணீருக்குள் துக்கத்தை அமுக்கி விட்டால் அதன் பாரம் ஒருவனைத் தாக்காது.
33.நல்ல விஷயங்களை நாளை என்று காலம் தாழ்த்தக் கூடாது. அவற்றைச் செய்து முடிக்க இன்றே நல்ல நாள்.
34.பிறருக்கு உபதேசம் செய்யும் முன் நமக்கு தகுதி இருக்கிறதா என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது.
35.புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் 'நான்' என்னும் ஆணவம் கூடாது.
36.மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.
37.பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.
38.வாழ்வில் ஒழுக்கமும், நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும், கலையுணர்வும் வந்து விடும்.
39.வெறிநாய் போல நாலா திசையிலும் மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்க கூடாது. தியானம் மூலம் அதை ஒருமுகப்படுத்த வேண்டும்.
40.மரத்திற்கு தண்ணீர் விடுவதும், மிருகங்களுக்கு உணவு அளிப்பதும் உயர்வான தர்மம் என நீதி சாஸ்திரம் கூறுகிறது.