கிருபானந்த வாரியார் சிந்தனை வரிகள் - 05 | Kirupanandha Variyar inspirational quotes in Tamil – 05
41.கடவுளை வழிபடுவதைக் காட்டிலும் ஏழைக்குச் செய்யும் உதவியே மேலானது.
42.அறிவு வளர வளர மனிதன் அடக்கமுடன் இருக்க வேண்டும். இதுவே அறிவின் அடையாளம்.
43.குலத்தால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது கூடாது. குணத்தால் மனிதனை அளப்பதே சிறந்தது.
44.குடும்பம் என்னும் வண்டிக்கு கணவனும், மனைவியும் சக்கரம் போல இயங்க வேண்டும்.
45.துன்பம் இன்றி வாழ நினைத்தால், எல்லா உயிர்களையும் கடவுளாகப் போற்றுங்கள்.
46.தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், வாழ்வதில் அர்த்தமில்லை.
47.இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தால் என்றும் நலமுடன் வாழலாம்.
48.சிறிது காலம் இருந்தாலும், புகழோடு வாழ முயற்சி செய்யுங்கள்.
49.வாழ்க்கையில் குறுக்கிடும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
50.தனக்கு மட்டுமில்லாமல் பிறருக்கும் பயனுள்ள விதத்தில் வாழ்பவனே நல்ல மனிதன்.