காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 07 | Kanji Periyavar inspirational quotes in Tamil -07
61.எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தி கூடாது. அக்கறையுடன் செயல்படுவது அவசியம்.
62.வரவு செலவு கணக்கு பார்க்கும் வியாபாரியாக இல்லாமல், பிறருக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும்.
63.வாழ்வில் ஒழுக்கத்தைப் பின்பற்றினால் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒழுங்கும், நேர்த்தியும் வெளிப்படும்.
64.சுயநலத்துடன் சொந்த வேலைகளில் மட்டும் மனிதன் ஈடுபடுகிறான். ஆசை இல்லாமலும் செயலாற்ற வேண்டும்.
65.மனதிலுள்ள ஆசையே கோபமாக உருவெடுக்கிறது. அதனால் தீய செயல்களில் ஈடுபட்டு பாவத்திற்கு ஆளாக நேரிடுகிறது.
66.வேதம் என்னும் மரம் செழித்திருந்த நாடு தமிழ்நாடு. பாரதியாரும் 'வேதம் நிறைந்த தமிழ்நாடு' என்று குறிப்பிட்டுள்ளார்.
67.மனதில் எழும் ஆசைகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைகளை அதிகப்படுத்திக் கொள்வது கூடாது.
68.குடும்பக் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல், பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடுதல் கூடாது.
69.கடவுளை நினைத்துச் செய்யும் எந்தச் செயலுக்கும் பயன் அதிகம். அறியாமல் செய்தாலும் அதற்கும் பலன் அளிக்கிறார்.
70.கபடம் சிறிதும் இல்லாத குழந்தை மனம் உள்ளவனாக வாழுங்கள்.