காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 09 | Kanji Periyavar inspirational quotes in Tamil -09
81.மனிதனாகப் பிறந்தவன் யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் இங்கிருந்து புறப்பட்டே ஆக வேண்டும்.
82.அறியாமையால் மனிதன் மனதாலும், செயலாலும் பாவம் செய்யும் தீய சூழலுக்கு ஆளாகிறான்.
83.உலகிலுள்ள எல்லாம் ஒன்றே என்ற தெளிவு வந்து விட்டால் தீய குணங்கள் யாவும் மறையும்.
84.துன்பத்தில் மட்டுமில்லாமல் கடவுளை இன்பத்திலும் மறப்பது கூடாது.
85.பிறரிடம் சொல்வதை விட துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நிம்மதி கிடைக்கும்.
86.செய்த பாவம் தீரவே கடவுள் நம்மை இந்த பிறவியில் மனிதர்களாகப் பிறக்கச் செய்திருக்கிறார்.
87.மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. ஆனால், மனிதன் அதை வெளியுலகில் தேடிக் கொண்டிருக்கிறான்.
88.நாம் நம்மால் முடிந்த நற்செயல்களைச் செய்து வந்தால் போதும். கடவுள் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்.
89.தானத்தில் சிறந்தது அன்னதானமே. இதில் மட்டுமே ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும்.
90.எந்த செயலையும் அதற்குரிய முறையோடு தான் செய்ய வேண்டும். அதுவே நியாயமான வழியாகும்.