காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 14 | Kanji Periyavar inspirational quotes in Tamil -14
131.உதவி என்றில்லாமல், பிறருக்கு நல்லது நினைத்தாலும் புண்ணியம் கிடைக்கும்.
132.அகிம்சை நெறியை பின்பற்றுபவரிடம் சேர்ந்தால் தீயவனும் திருந்தி விடுவான்.
133.மனதில் நினைப்பதையே பேச வேண்டும். எண்ணம் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருக்கக் கூடாது.
134.யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்வதே அகிம்சை. இதை பின்பற்றினால் மனதை எளிதில் வசப்படுத்த முடியும்.
135.மற்றவர்களின் தவறைத் திருத்தி நல்வழிப்படுத்த அன்பு ஒன்றே சிறந்த வழி.
136.மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை உடனடியாக செயல்படுத்தி விடு.
137.பொறாமை இருக்கும் வரை, மன நிம்மதி இருக்காது.
138.குடும்பத்தின் தேவையை நிறைவேற்று. சமுதாய சேவையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
139.பொருட்களை அதிகப்படுத்திக் கொள்வதால், வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடுவதில்லை.
140.பணம் தேடுவதை விட நல்லவன் என்ற பெயரையும் சம்பாதிக்க வேண்டும்.