காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 10 | Kanji Periyavar inspirational quotes in Tamil -10
91.ஒவ்வொருவரின் பார்வைக்கும் நியாயம் வெவ்வேறானதாக தோன்றினாலும், பொது நியாயத்தைச் செய்வது நல்லது.
92.நல்ல மனிதர்களிடம் நட்பு வைத்துக் கொண்டால், நல்வழியில் நடக்க துாண்டுகோலாக இருக்கும்.
93.ஆசையும், வெறுப்பும் இல்லாமல் செய்யும் எந்த செயலும் நன்மையானதாகவே இருக்கும்.
94.உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
95.பக்தியோடு உண்பதால் மனதில் நல்லெண்ணம் உண்டாகும். இந்த
பழக்கம் நாம் நல்லவர்களாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.
96.எல்லாரிடமும் சமமான அன்பு, இனிமையாகப் பழகுதல் போன்றவையே தொண்டு செய்வோருக்கு தேவையான அடிப்படை குணங்கள்.
97.சமூகசேவையும், கடவுள் பக்தியும் இணைந்து விட்டால் அகில உலகமும் நன்மை பெறும்.
98.நேர்மையுடன் எந்த செயலைச் செய்தாலும், அதில் ஆர்வமும், விருப்பமும் உண்டாகும்.
99.எதைப் பாதுகாக்காவிட்டாலும், நாக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்று திருவள்ளுவர் குறளில் கூறியுள்ளார். 'கொட்டி விடலாம்; ஆனால், அள்ள முடியாது' என பாமரரும் பேச்சால் வரும் கேடு பற்றிச் சொல்வதுண்டு.
100.கடவுள் இரண்டு கைகளைக் கொடுத்ததன் நோக்கம், நம்மால் முடிந்த உதவியை செய்வதற்காகவே.