காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 11 | Kanji Periyavar inspirational quotes in Tamil -11
101.மாணவன் கல்வியை பணிவுடன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் உலகிற்கு பயன் உண்டாகாது.
102.இறைவனின் இருப்பிடமான மனதைப் பாதுகாக்க தினமும் தியானம் செய்யுங்கள்.
103.மனித வாழ்வில் அடையும் பாக்கியங்களில் சிறந்தது, பிறருக்கு சேவை செய்து வாழ்வது ஒன்றே.
104.பிறருக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பக்குவமாகவும் சொல்ல வேண்டும்.
105.பிறரது குறைகளை பெரிதுபடுத்தாமல், அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களை பார்க்கப் பழக வேண்டும்.
106.விருப்பும், வெறுப்பும் மனிதனை பாவச் செயல்களில் தள்ளி விடும் அபாயம் கொண்டவை.
107.துன்பத்தை பிறரிடம் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால், மனிதர்களிடம் சொல்வதை விட கடவுளிடம் சொல்வது மனநிம்மதிக்கு வழிவகுக்கும்.
108.அறிவு, அழகு, செல்வம் இவற்றில் உயர்ந்திருப்பவர்கள் அதை எண்ணி கர்வம் அடைவது கூடாது.
109.தினமும் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபாடு நடத்த வேண்டும். இதற்காக பத்து நிமிடம் ஒதுக்கினால் போதும்.
110.புகழுக்காக எந்த செயலிலும் ஈடுபடுவது கூடாது. புகழை விரும்பும் மனிதன் அகங்காரத்திற்கு ஆளாக நேரிடும்.