சத்யசாய் சிந்தனை வரிகள் - 13 | Satya Sai inspirational quotes in Tamil - 13
121.பிறருக்கு உதவுவதே சிறந்த பூஜை. தெய்வப்பற்றே உன் உள் மூச்சு. கோபமே பாவம், தானமே தியாகம்.
122.உன் பலவீனம் தான் உன்னை அசுரத்தன்மை உள்ளவனாகவும், கோபக்காரனாகவும் மாற்றுகிறது. அதை அறிந்து துரத்தி விடு.
123.மனமே உன்னுடைய முதல் மகன். மகன் மீது அன்பு காட்டுவது போல பிறர் மீதும் அன்பு செலுத்து.
124.பிறப்பும், இறப்பும் அனைவருக்கும் பொதுவானது. இதில் ஏழை, பணக்காரன் என்ற பேதம் கிடையாது.
125.விதிப்படி இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நடப்பதைக் கண்டு கலங்காதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கருது.
126.நாளை பார்த்துக் கொள்ளலாம் என நற்செயலை ஒத்தி போடாதே. உடனே அக்கறையுடன் அதில் ஈடுபடு.
127.எதிர்காலம் குறித்த கவலை வேண்டாம். உனக்குத் தகுதியானது எதுவோ அது சமயத்தில் கிடைக்கும்.
128.பெற்றோரை காட்டிலும் சிறந்த தெய்வம் இல்லை. நேர்மையைக் காட்டிலும் சிறந்த வழிபாடு இல்லை.
129.இன்பம் துன்பத்திலும், துன்பம் இன்பத்திலும் முடிவடையும். இந்த முரண்பாட்டை யாரும் தவிர்க்க முடியாது.
130.வேதனையும், சோதனையும் வாழ்வில் குறுக்கிடும் போது, கடவுள் மீதான நம்பிக்கையை குறைத்து மதிப்பிடாதீர்கள்.