சத்யசாய் சிந்தனை வரிகள் - 14 | Satya Sai inspirational quotes in Tamil - 14
131.கடவுள் எங்கோ கண் காணாமல் இருப்பதாக மனிதன் கருதுகிறான். உண்மையில் நம் இதயக் கோவிலே அவரின் இருப்பிடம்.
132.குறுகிய மனப்பான்மை கொண்டவன் விலங்கு நிலைக்கு தாழ்கிறான். பரந்த மனம் உள்ளவன் தெய்வ நிலைக்கு உயர்கிறான்.
133.தாயின் அன்பும், தியாகமும் இல்லாவிட்டால் உலகில் நம்மால் வாழவே முடியாது. பெற்ற தாயிடம் நன்றி செலுத்துவது நம் கடமை.
134.பக்தி என்பது தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் அல்ல. அதுவே வாழ்விற்கு சத்தான உணவாக உள்ளது.
135.ஆசைகளை நெறிப்படுத்தவும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் பழகிக் கொள்ளுங்கள்.
136.சத்தியம் என்னும் அடித்தளத்தின் மீது தான், தர்மம் என்னும் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
137.விலைவாசியைக் கட்டுப்படுத்துவதை விட, மனிதன் தன் மனதைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
138.உண்மையை பேசுங்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். அனைவர்மீதும் அன்புக்கரம் நீட்டுங்கள்.
139.புத்தக அறிவு மட்டும் பயன் தராது. எதையும் அனுபவம் மூலமாகவே சோதித்து உணர்வதே சிறந்தது.
140.நன்கொடை மனிதனை அழகுபடுத்துகிறது. வாழ்வை புனிதமாக்குகிறது. தேடிய பணத்தில் ஒரு பகுதியை தர்மம் செய்து வாழ்வதே சிறந்தது.