சத்யசாய் சிந்தனை வரிகள் - 16 | Satya Sai inspirational quotes in Tamil - 16
151.கடவுள் அவரவர் தகுதிக்கேற்பவே அருள்கிறார். ஆனாலும், நமக்கு எது வேண்டுமோ, அதை அவரிடம் கேட்டும் பெறுவதில் தவறில்லை.
152.மற்றவரைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம். அவர்களிடமுள்ள நல்ல பண்புகளை மட்டும் பார்க்கப் பழகுங்கள்.
153.மற்றவர்களின் சந்தோஷத்தைக் கண்டு நீங்களும் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
154.மேடு பள்ளம் போல வாழ்வில் இன்ப துன்பம் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கும்.
155.வாழ்க்கை என்னும் மரத்திற்கு தன்னம்பிக்கையே வேர். நன்னடத்தையே அதன் கனிகள்.
156.பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல, நல்லவர்களோடு சேர்ந்தாலே வாழ்வில் உயர்வு உண்டாகும்.
157.உலகம் நமக்கு நிரந்தரமானது அல்ல. வாழ்க்கைப் பயணம் முடியும் வரை தான் இங்கு நமக்கு வேலை.
158.உழைப்பினால் கிடைக்கும் பணமே சிறந்தது. அதில் உண்டாகும் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தையில்லை.
159.சத்தியத்தைப் பேசுவதும், சத்தியவழியில் நடப்பதும் பக்தி மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடு.
160.எல்லாம் தெரிந்தவர் என்று ஒருவர் உலகில் யாரும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கவே செய்யும்.