சத்யசாய் சிந்தனை வரிகள் - 17 | Satya Sai inspirational quotes in Tamil - 17
161.கடமையே கடவுள். அதற்காகப் பணியாற்றுவதே வழிபாடு. வாழ்வில் ஒரு விநாடியைக் கூட வீணாக்காமல் கடமையாற்றுங்கள்.
162.எந்த வேலையில் ஈடுபட்டாலும், அதற்கு உரிய நேரத்திற்குள் செய்து முடியுங்கள்.
163.வெறும் பேச்சோடு மட்டுமில்லாமல், நடத்தையாலும் உங்கள் செயல்பாடு உண்மையாக்கப்பட வேண்டும்.
164.கடவுளை நம்புங்கள். பாவம் செய்ய அஞ்சுங்கள். இதுவே மேலான தொண்டு.
165.முயற்சி நம் கையில். பலனோ கடவுளின் கையில்.
166.வெறும் பூஜையில் ஈடுபடுவதோ, பஜனை செய்வதோ பக்தியல்ல. உயிர்களை நேசிப்பதே சிறந்த பக்தி.
167.நம் உடல் கடவுள் கொடுத்த அன்புப் பரிசு. அதை அவருக்குரிய பணிகளுக்காக அர்ப்பணியுங்கள்.
168.சிந்தித்ததை எல்லாம் பேச வேண்டாம். யோசித்து தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசுங்கள்.
169.மனிதனைத் தாக்கும் ஆயுதம் போன்றது நாக்கு. நாக்கினால் உண்டான காயம் எளிதில் ஆறுவதில்லை.
170.உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ள வேண்டாம்.