சத்யசாய் சிந்தனை வரிகள் - 18 | Satya Sai inspirational quotes in Tamil - 18
171.காலம் மிக முக்கியமானது. ஒவ்வொரு நாளும் அந்தந்த பணியை அதற்குரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்.
172.குளிர்ச்சி மிக்க இடத்தில் உடல் மட்டுமே குளிர்ச்சி அடையும். நேர்மையால் மட்டுமே உள்ளம் குளிர்ச்சி பெறும்.
173.வெறும் பேச்சால் பயனில்லை. செயல் மூலமாக மற்றவருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
174.நல்லொழுக்கம், கட்டுப்பாடான வாழ்வு, உயிர்கள் மீது அன்பு ஆகியவற்றால் பெறும் மனநிறைவே சொர்க்கம்.
175.குறுக்கு வழியில் பணம் தேடலாம். ஆனால், அது நிலைப்பதில்லை.
176.எந்த வயதைச் சேர்ந்த பெண் என்றாலும், அவளைத் தாயாக மதிப்பவன் நல்ல மனிதன்.
177.பிறந்த நாட்டையும், பெற்ற தாயையும் நேசியுங்கள். அவர்களுக்காகத் தியாகமும் செய்யுங்கள்.
178.மனசாட்சி நமக்குள் இருந்து நம்மை வழிநடத்துகிறது.
179.அன்றாட வழிபாட்டில் உலகிலுள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தியுங்கள்
180.கடவுள் நினைப்பில் முழுமையாக கரைந்து விடுங்கள். அவரை அடைய நேசிப்பதும், சுவாசிப்பதுமே தியானம்.