புத்தர் சிந்தனை வரிகள் – 18 | Buddha inspirational quotes in Tamil - 18
171.பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்.
172.அக்கறையுடன் படித்தால்தான் அறிதல் சாத்தியம்.
173.காரணத்தையும் விளைவையும் அறிந்து கொண்டால் குற்றம் நேர வழி ஏது?
174.கவனத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டால் எவ்வித அபாயத்தையும் குழப்பமில்லாமல் சமாளிக்கலாம்.
175.நம்பிக்கையும் நேர்மையும் இருப்பதே உயர்ந்த பாதுகாப்பான பொக்கிஷமாகும். இப்படிபட்டவர்கள் எங்கே சென்றாலும் பாராட்டப்படுவார்கள்.
176.தகுதி தகுதியின்மை இரண்டுக்கும் மேம்பட்டு இந்த உலகத்தை நன்றாக உணர்ந்து நெறிமுறையுடன் வாழ்பவனே சிறந்தவன்
177.பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும் அதுவே.
178.தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படு பாதாளத்தில் தள்ளி விடும் .
179.அஞ்ச வேண்டாத விஷயங்களுக்கு அஞ்சுபவனும், அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பவனும் தீய பாதையில் செல்பவர்களே.
180.இழிவுகளை சகித்துக் கொள்ளுங்கள். துன்பத்தில் இருந்து ஞானம் பெறுங்கள்.