புத்தர் சிந்தனை வரிகள் – 19 | Buddha inspirational quotes in Tamil - 19
181.வேறுபாடு எதுவுமின்றி அனைத்தையும் தூய்மையாக்கும் தண்ணீரைப்போன்றது வாழ்க்கையில் நல்லறம்.
182.நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.
183.சுறுசுறுப்பான முன்னேற்றத்திற்கு ஒழுங்கு முக்கியம்.
184.முதியோரும் இளைஞரும் ஒருவருக்கொருவர் பரிவு காட்டி ஒத்து வாழ்ந்தால் பண்பு செழிக்கும்.
185.காரியத்தைத் திட்டமிட்டுக் கொண்டால் கடினமாக உழைக்க வேண்டியிராது.
186.சமுதாயத்தில் எளிமையாகவும், கண்ணியமாகவும் வாழ்வதே பண்பட்ட நடத்தை ஆகும்.
187.எளிதாய்ப் பெறுகிற வெற்றி நம்மை கர்வமுடையவர்களாக்கி விடும்.
188.தராசைப்போல் நன்மைகளையும் தீமைகளையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்பவனே ஞானி. எதையும் சிந்தித்து பார்ப்பவனும் அவனே.
189.சிறந்த குதிரையானலும் சாட்டையடியிலிருந்து தப்பமுடியாது. அதே போல் இந்த உலகத்தில் என்ன தான் சிறந்த மனிதனாலும் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பமுடியாது.
190.தலைமயிர் நரைத்து விட்டதனால் மட்டும் ஒருவர் முதிர்ச்சியடைந்த பெரியவர் ஆக இயலாது. அவ்வாறு அவர் அடைந்த முதிர்ச்சி பயனற்ற முதுமையாகும். மனதால் முதிர்ச்சியடைய வேண்டும்.