சத்யசாய் சிந்தனை வரிகள் - 19 | Satya Sai inspirational quotes in Tamil - 19
181.எத்தனை சோதனை வாழ்வில் குறுக்கிட்டாலும், கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் அதனை எளிதாகப் போக்கி விட முடியும்.
182.முயற்சி மட்டுமே மனிதன் கையில் இருக்கிறது. அதில் கிடைக்கும் வெற்றியோ, தோல்வியோ கடவுளின் கையில் தான் இருக்கிறது.
183.எந்த செயலிலும் முழு மனதுடன் ஈடுபடுங்கள். பின், அதன் விளைவைப் பற்றி சிந்திக்காமல் பணியாற்றுங்கள்.
184.தீய எண்ணம் நம்மைத் தாக்காமல் காத்துக் கொள்ள நல்லவர்களுடன் மட்டும் உறவாடுங்கள்.
185.எப்போதும் விழிப்புடன் இருங்கள் என்று பெரியவர்கள் உபதேசிக்கிறார்கள். ஏனென்றால், சின்ன விஷயத்தில் கூட பெரிய அனுபவம் நமக்காக காத்திருக்கலாம்.
186.நன்மையும், தீமையும் நாம் செய்த செயல்களின் அடிப்படையில், பாவ புண்ணியமாக வந்தடைகின்றன.
187.பேராசை, கர்வம், பொறாமை, கோபம் போன்ற தீய குணங்களைத் தூக்கி எறியுங்கள். எல்லா உயிர்களையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
188.சுயநலமில்லாதவர்களாக வாழுங்கள். உள்ளத்தூய்மையுடன் பிறருக்குச் சேவை செய்யுங்கள்.
189.நாவைச் சரிப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும். நாவால் உண்டாகும் சுவை, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமையும்.
190.பேச்சு அளவாகவும், இனிமையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் ஒருவரின் ஆற்றல் வெளிப்படும்.