சத்யசாய் சிந்தனை வரிகள் - 20 | Satya Sai inspirational quotes in Tamil - 20
191.நல்ல நூல்களைப் படிப்பது, நல்லவர்களுடன் பழகுவது, கடவுளிடம் முழுநம்பிக்கை வைப்பது இவையெல்லாம் முன்னேறும் வழிகள்.
192.பெண்கள் ஆண்களைப் போல படிப்பது நல்லது தான். திறமைக்கேற்ப வேலைக்குச் செல்வதிலும் நன்மையே. ஆனால், கட்டுப்பாடு இல்லாமல், சுதந்திரமாக செயல்படுவது நல்லதல்ல.
193.ஆசைக்கு ஒரு உச்ச வரம்பை வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் மனம் அமைதியுடன் இருக்கும்.
194.உரிமை என்பது கடமையில் அடங்கி இருக்கிறது. கடமை உணர்வோடு கூடிய உழைப்பு தான், உயர்வுக்கு வழிவகுக்கும்.
195.புத்தக அறிவு மட்டும் பயன் தராது. எதையும் அனுபவத்தின் மூலம் சோதித்து உணருங்கள்.
196.பிறர் மீது குற்றம் காண்பதிலும், புறம் பேசுவதிலும் நேரத்தை செலவிடாதீர்கள்.
197.பேச்சில் உண்மையும், செயலில் நேர்மையும் பிரதிபலிக்கட்டும்.
198.அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். அன்பு மிக்கவர்களுக்கு ஆண்டவன் தரிசனம் கிடைக்கும்.
199.வேப்ப விதைகளில் இனிய மாமரம் முளைப்பதில்லை. தீமையைச் செய்து நன்மையை எதிர்பார்க்க முடியாது.
200.கடவுள் நம்பிக்கை இல்லாமல் கூட வாழலாம். தன்னம்பிக்கை இல்லாவிட்டால் வாழவே முடியாது.