சத்யசாய் சிந்தனை வரிகள் - 21 | Satya Sai inspirational quotes in Tamil - 21
201.நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. பிறருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.
202.சூழ்நிலை எப்போதும் சாதகமாக இருப்பது இல்லை. வெற்றியும், தோல்வியும் கலந்தது தான் வாழ்க்கை.
203.பகுத்தறிவால் பக்தியை ஆராய்ச்சி செய்ய வேண்டாம். அன்பால் அதற்கு மதிப்பு கொடுங்கள்.
204.எண்ணத்தில் ஒழுக்கம் இருந்தால், செயல்களிலும் அது பிரதிபலிக்கும்.
205.சுயநலத்தைப் பின்னுக்குத் தள்ளினால் கடவுளின் தரிசனத்தைப் பெறலாம்.
206.‘மண்ணில் பிறந்ததன் பயன் மற்றவர்க்கு உதவி செய்வதே' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
207.தலைவனாக விரும்பினால் முதலில் தொண்டனாக இருந்து பிறருக்குச் சேவை செய்யுங்கள்.
208.உன்னையே எனக்கு கொடு என்று கடவுளிடம் மன்றாடி வழிபடுங்கள்.
209.இளமையும், செல்வமும் நிரந்தரமல்ல. சத்தியம் ஒன்றே என்றும் அழியாதது.
210.உழைத்து வாழப் பழகி விட்டால், அதன் பின்னர் யாரிடமும் கைநீட்டி யாசிக்கும் தேவை உண்டாகாது.