சத்யசாய் சிந்தனை வரிகள் - 22 | Satya Sai inspirational quotes in Tamil - 22
211.சொல்லும், செயலும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருக்க வேண்டும்.
212.ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. புத்தகத்தில் பெறும் அறிவை விட, அனுபவம் தரும் அறிவே சிறந்தது.
213.பெற்ற தாயும், இயற்கை அன்னையும் மதிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களின் துணை இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது.
214.உதவி செய்ய முடியாவிட்டாலும், பிறருக்கு உபத்திரவம் செய்வதை தவிருங்கள்.
215.தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாம் நன்மையாக முடியும்
216.யாரையும் வெறுப்பது கூடாது. பிடிக்கா விட்டால் பழகாமல் இருப்பது நல்லது.
217.உலகிலுள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று அன்றாட வழிபாட்டில் வேண்டுங்கள்.
218.மனிதப்பிறவி மீண்டும் கிடைக்காமல் போகலாம். அதனால் வாழ்வைப் பயனுள்ளதாக்குங்கள்.
219.ஒருவரிடம் பொறுமையும், விடா முயற்சியும் இருந்தால் எண்ணியதை எண்ணியவாறே பெற முடியும்.
220.பசித்தவருக்கு உணவு அளிக்கும் நாளே நல்ல நாள் என்பதை உணருங்கள்.