சத்யசாய் சிந்தனை வரிகள் - 23 | Satya Sai inspirational quotes in Tamil - 23
221.இதயத்தில் இறைவன் குடியிருக்கிறார். அவரை வேறெங்கு தேடினாலும் காண முடியாது.
222.பனிக்கட்டி உருகுவது போல நம் வாழ்நாள் கரைகிறது. அதற்குள் மனிதப்பிறவியை பயனுள்ளதாக ஆக்குங்கள்.
223.யாரையும் தாழ்வாகக் கருதாதீர்கள். கடவுளின் படைப்பில் அனைவரும் உன்னதமானவர்களே.
224.உழைத்து வாழவே கடவுள் நமக்கு இரு கைகளைக் கொடுத்திருக்கிறார்.
225.பெற்றோரை நேசியுங்கள். அவர்களின் ஆசி இருந்தால் நம் வாழ்வு மேம்படும்.
226.உண்மையைப் பேசுங்கள். நேர்மையான வழியில் பணம் சம்பாதியுங்கள்.
227.அறிந்தாலும், அறியாவிட்டாலும் நீங்கள் ஒவ்வொருவரும் தெய்வத் தன்மை கொண்டவர்களே.
228.லட்சியப் பயணத்தில் தடை குறுக்கிட்டாலும், துணிச்சலுடன் அதை எதிர்கொள்ளுங்கள்.
229.எதையும் இலவசமாகப் பெறக்கூடாது. உழைப்பினால் கிடைக்கும் சம்பாத்தியமே சிறந்தது.
230.யாரையும் திசை மாற்ற வேண்டாம். உண்மைக்குப் புறம்பாக எதையும் திரித்துக் கூறாதீர்கள்.