சத்யசாய் சிந்தனை வரிகள் - 24 | Satya Sai inspirational quotes in Tamil - 24
231.பொறுமையும், விடாமுயற்சியும் உங்களிடம் இருந்தால், வெற்றி வந்து சேரும்.
232.குறை காணும் பழக்கத்தை விட்டொழியுங்கள். பிறரிடம் உள்ள நல்லதை மட்டுமே காணுங்கள்.
233.உங்களுக்குப் பிறர் செய்த தீமை, பிறருக்கு நீங்கள் செய்த நன்மை இரண்டையும் மறந்து விட முயலுங்கள்.
234.எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால் வருந்தாதீர்கள். கடவுளின் விருப்பம் இதுவே என திருப்தி கொள்ளுங்கள்.
235.பண்பாடு இல்லாத மனித வாழ்வு இறக்கை இல்லாத பறவைக்குச் சமமானது.
236.வானுக்கு நிலவு அழகு தருவது போல மனிதனுக்கு நேர்மையே சிறப்பைத் தருகிறது.
237.எங்கும் அன்புப்பயிரை விதையுங்கள். சேவை என்னும் தண்ணீரால் அதை வளரச் செய்யுங்கள்.
238.சோதனை வாழ்வில் குறுக்கிடும் நேரத்தில், கடவுள் மீது தீவிரமாக பக்தி செலுத்துங்கள்.
239.அன்பு நிறைந்திருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
240.விடாமுயற்சியுடன் உழைப்பவன் செல்வத்தை அடைகிறான். தர்மச் செயல்களில் ஈடுபடுவன் புண்ணியத்தை அடைகிறான்.