சத்யசாய் சிந்தனை வரிகள் - 26 | Satya Sai inspirational quotes in Tamil - 26
251.உயர்ந்த இடத்தில் உள்ள நட்சத்திரத்தைப் போல மனதை என்றும் பிரகாசமாக வைத்திருங்கள்.
252.பிறரிடமுள்ள நல்ல விஷயங்களை மட்டும் பார்க்கப் பழகுங்கள். இதனால், எல்லோரும் மகிழ்ச்சியாக வாழலாம்.
253.சூழ்நிலை மனிதனை உருவாக்குவதில்லை. அவனவன் எண்ணத்தைப் பொருத்ததே வாழ்வு.
254.நியாயமான வழி சிக்கலானதாக இருந்தாலும், எதையும் குறுக்குவழியில் அடைய முயலக்கூடாது.
255.ஆடம்பரம் என்னும் அரக்க குணம் இல்லாமல் வாழுங்கள். எளிமையில் தான் இனிமை இருக்கிறது.
256.பிறருடைய அந்தரங்க விஷயங்களில் குறுக்கிடாமல் இருப்பதே மேலான பண்பு.
257.சோர்வை தள்ளிவிட்டு, எப்போதும் உற்சாகத்துடன் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுங்கள்.
258.பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று சொல்வது கூடாது. அதன் மீது கடும்பற்று வைக்காதே என்று தான் சொல்ல வேண்டும்.
259.பிறரைப் பார்த்து நாமும் ஆடம்பரமாக வாழ முற்படுவது கூடாது. ஒருவரிடமுள்ள நற்பண்புகளை மட்டும் கடைபிடிக்க முயல்வது நல்லது.
260.இன்று மனிதர்கள் நிறைய நல்லதை பேசுகிறார்கள். ஆனால், அவற்றை கடைபிடிக்க மறந்து விடுகிறார்கள்