சத்யசாய் சிந்தனை வரிகள் - 27 | Satya Sai inspirational quotes in Tamil - 27
261.தீய எண்ணம் மனதிற்குள் நுழைந்து விடாதபடி விழிப்புடன் இருங்கள். நல்லவர்களுடன் மட்டும் உறவாடுங்கள்.
262.தலைவனாக இருக்க விரும்புபவன் முதலில் மற்றவருக்கு சேவகனாக இருந்து தொண்டாற்ற முன் வர வேண்டும்.
263.எங்கு தேடினாலும் சொர்க்கத்தை அடைய முடியாது. ஒழுக்கமுடன் வாழ்ந்தால் சொர்க்கம் நம்மைத் தேடி வந்து விடும்.
264.தெய்வத்தை கோயில்களில் தேடுகிறோம். ஆனால், மனித உள்ளமே தெய்வம் விரும்பி வசிக்கும் வீடாகும்.
265.உங்களை நீங்களே பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டாம். தகுதி இருக்குமிடம் நோக்கி புகழ் தானாகவே வரும்.
266.நல்ல உணவால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. அது போல, நல்ல உணர்வுகளால் உள்ளம் ஆரோக்கியம் பெறுகிறது.
267.நாம் நல்லவர்களாக இருப்பதோடு, நாம் பழகுகின்ற நண்பர்களும் நல்லவர்களாக இருப்பது அவசியம்.
268.நேர்மை, ஒழுக்கம் இவற்றைப் புறக்கணிப்பதால் வாழ்க்கையில் வசதிவாய்ப்பு பெருகலாம். ஆனால் மனநிம்மதியை இழக்க நேரிடும்.
269.ஆசைக்கு ஒரு வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மனம் போன போக்கில் சென்றால் துன்பமே உண்டாகும்.