சத்யசாய் சிந்தனை வரிகள் - 28 | Satya Sai inspirational quotes in Tamil - 28
271.கடமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏனென்றால் அதில் தான் உங்களின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது.
272.தர்மத்தை நாம் காப்பாற்றினால் அந்த தர்மம் நம்மைக் காப்பாற்றி கரை சேர்க்கும்.
273.மனிதனுக்கு நல்லது, கெட்டதை பகுத்தறியும் திறனை கடவுள் கொடுத்து இருக்கிறார்.
274.சேவையில் ஈடுபடும்போது, 'நான் பிறருக்கு உதவி செய்கிறேன்' என்ற தற்பெருமையுடன் செயல்படுவது கூடாது.
275.கல்லிலே கடவுளைக் காண முயலவேண்டுமே தவிர, கடவுளைக் கல்லாக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.
276.புத்தக அறிவு மட்டும் போதாது. அனுபவ அறிவைத் தேடுங்கள். அதுவே முன்னேற்றத்தை தரும்.
277.கோபத்தில் எந்த செயலிலும் ஈடுபடாதீர்கள். கோபம், பதட்டம், வேகம் மூன்றும் சேர்ந்தால் மனக்குழப்பமே மிஞ்சும்.
278.தர்மத்தைப் பற்றி பேசுவதை காட்டிலும், செயலில் வெளிப்படுத்துவதே சிறந்தது.
279.கடவுள் விரும்பும் மலர் இதயம் தான். அது பக்தி என்னும் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கட்டும்.
280.தாய் மண்ணை நேசித்து வாழுங்கள். எத்தகைய தியாகத்தையும்
அதற்காக செய்ய முன்வர வேண்டும்.
அதற்காக செய்ய முன்வர வேண்டும்.