சத்யசாய் சிந்தனை வரிகள் - 29 | Satya Sai inspirational quotes in Tamil - 29
281.உழைத்து வாழப் பழகியவனுக்கு யாரிடமும் கைநீட்டி யாசிக்கும் அவசியம் உண்டாகாது.
282.சந்தேகத்தை முன் வாசல் வழியாக அனுமதித்தால், நம்பிக்கை பின்வாசல் வழியாக வெளியேறி விடும்.
283.ஒருமுறை கோபம் கொண்டால் ஒருவனுக்கு மூன்று மாத ஆரோக்கியம் காணாமல் போய் விடும்.
284.வாழ்வில் தடை குறுக்கிடும் போது தான், மனிதன் தைரியத்தை இழக்காமல் துணிந்து நிற்க வேண்டும்.
285.குற்றம் குறையில்லாத மனிதன் யாருமில்லை. நல்லதும் கெட்டதும் கலந்ததே இந்த உலகம்.
286.தண்ணீர் வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் மட்டும் தாகம் தீராது. அதைத் தேடிச் சென்று பருக வேண்டும். அதாவது, எதிலும் முயற்சி வேண்டும்.
287.உலகில் விலை உயர்ந்த பொருள் காலம் மட்டுமே. வாழ்வில் ஒரு நொடியைக் கூட வீணாக்காதீர்கள்.
288.நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. உங்கள் நண்பர்களும் நல்லவர்களாக இருப்பது முக்கியம்.
289.சத்தியம் என்னும் அடித்தளத்தின் மீது தான் தர்மம் என்னும் கட்டிடம் நின்று கொண்டிருக்கிறது.
290.இதயம் என்னும் பலூனில் எப்போதும் நம்பிக்கை என்னும் காற்றை மட்டுமே நிரப்புங்கள்.