Type Here to Get Search Results !

அம்மாவை பற்றிய அருமையான கவிதைகள் | Amazing Quotes about mother






அம்மாவை பற்றிய அருமையான கவிதைகள் | Mother Quotes in Tamil

1.காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே...!
அவளை என்றும்
மனதில் சுமப்போம்...

2.ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை...

3.இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
தன் அருகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை

4.வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை....
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்....
இன்னும் குழந்தையாக....

5.அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது...!

6.வலி நிறைந்தது
என்பதற்காக
யாரும் விட்டுவிடுவதில்லை
தாய்மை

7.அன்புகலந்த
அக்கறையோடு சமைப்பதால்
தான் எப்போதும்
அம்மாவின் சமையலில்
சுவை அதிகம்...!

8.நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
அம்மா...!

9.இன்று என்னை
இவ்வுலகுக்கு
அறிமுகம் செய்த
என் அன்பு அம்மாவுக்கு
ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்

10.நான் உன்னுடன்
இருக்கும் பொழுது
என் பிரச்சனை
எப்போதும் மறந்து
விடுகிறேன் செல்லமே
(அம்மா)

11.எதுவும்
அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும்
கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே

12.உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை

13.கடல் நீரை
கடன் வாங்கி
கண்கொண்டு அழுதாலும்
நான் சொல்லும்
நன்றிக்கு போதாதம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்

14.ஒவ்வொரு நாளும்
கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள்
(அம்மா)

15.ஆழ்ந்த உறக்கத்தின்
அஸ்திவாரம்
அம்மாவின் தாலாட்டு

16.ஆயிரம் உணவுகள்
வித விதமாக சாப்பிட்டாலும்
அன்னை சமைத்த
உணவுக்கு ஈடாகாது

17.உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்து
கூறும் முதல்
குருவாக இருப்பவர்
அம்மா மட்டுமே




அம்மாவை பற்றிய அருமையான கவிதைகள் | Amazing Quotes about mother

Mother Quotes in Tamil 1

Mother Quotes in Tamil 2

Mother Quotes in Tamil 3

Mother Quotes in Tamil 4

Mother Quotes in Tamil 5

Mother Quotes in Tamil 6

Mother Quotes in Tamil 7

Mother Quotes in Tamil 8

Mother Quotes in Tamil 9

Mother Quotes in Tamil 10

Mother Quotes in Tamil 11

Mother Quotes in Tamil 12

Mother Quotes in Tamil 13

Mother Quotes in Tamil 14

Mother Quotes in Tamil 15

Mother Quotes in Tamil 16

Mother Quotes in Tamil 17

Mother Quotes in Tamil 18

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content