ஒரு வரியில் தமிழ் சிந்தனை வரிகள் - 03 | Tamil thought lines in one line - 03
21.கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே
22.ஊடலில்லையெனில் காதலும் கசக்கும்
23.ஒருவரையொருவர் சரியாய் புரிந்திருந்தால் எந்த உறவும் அழகே...!
24.இரவு காட்டில் இரைதேடும் சிறகில்லா
பறவை (நினைவு)
25.பிடிவாதத்தை எரித்துவிடுவோம் இல்லம் மற்றும் உள்ளம் மகிழ்சியாயிருக்க...!
26.அப்பாவின் அமைதி மொத்த தைரியத்தையும் உடைத்தெறிந்து விடுகிறது
27.சேமிப்பு இல்லையென்றால் உழைப்பும் வீணே
28.தலைக்கனம் இருப்பதால் தான் என்னவோ தட்டி இருக்கப் படுகின்றன ஆணிகள்
29.நாட்டமிடுகிறது குழந்தையின் அழகை கண்டு நாற்று...!
30.எந்த சூழ்நிலையிலும் நமக்கு ஆறுதல் நம் நம்பிக்கை மட்டுமே